கலப்பட தேன் விற்றால் கடும் நடவடிக்கை


கலப்பட தேன் விற்றால் கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 7 May 2022 7:48 PM IST (Updated: 7 May 2022 7:48 PM IST)
t-max-icont-min-icon

கலப்பட தேன் விற்றால் கடும் நடவடிக்கை

கூடலூர்

நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா தொடங்கி உள்ளது. இதையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. இந்த நிைலயில்  மேட்டுப்பாளையம், ஊட்டி, கூடலூர் சாலைகளில் மலைத்தேன் எனக்கூறி கலப்பட தேன் விற்பதாக உணவு பாதுகாப்புத்துறையினருக்கு புகார் வந்தது. 

இதனால் ஊட்டி-கூடலூர் சாலையில் உணவு பாதுகாப்புத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கலப்பட தேன் விற்பனை செய்த நபர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இனிமேல் கலப்பட தேன் விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

Next Story