திங்கள்சந்தை அருகே அம்மன் கோவிலில் உண்டியல் பணம் திருட்டு
திங்கள்சந்தை அருகே அம்மன் கோவிலில் உண்டியல் பணம் திருட்டு
திங்கள்சந்தை,
திங்கள்சந்தை அருகே உள்ள ஆலங்கோட்டில் பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. சம்பவத்தன்று பூஜைகள் முடிந்த பின்பு கோவில் நடையை பூசாரி பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் காலையில் பூசாரி கோவிலுக்கு வந்த போது கோவில் வளாகத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து ஊர்தலைவர் அய்யப்பனுக்கு தகவல்கொடுத்தார். அவர் வந்து பார்த்தபோது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியல் பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது அதில் மர்ம நபர் ஒருவரின் உருவம் பதிவாகி உள்ளது. அந்த காட்சியின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடந்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story