மது அருந்தி விட்டு கடன் தொகை வசூலித்த தலைமை காவலர் சஸ்பெண்டு


மது அருந்தி விட்டு கடன் தொகை வசூலித்த தலைமை காவலர் சஸ்பெண்டு
x
தினத்தந்தி 7 May 2022 8:22 PM IST (Updated: 7 May 2022 8:22 PM IST)
t-max-icont-min-icon

மது அருந்தி விட்டு கடன் தொகை வசூலித்த தலைமை காவலர் சஸ்பெண்டு

திருவண்ணாமலை

திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக (ஏட்டு) கலசபாக்கத்தை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் பணிபுரிந்து வந்தார். 

இவர் வட்டிக்கு பணம் கடன் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் ஒருவரின் வீட்டிற்கு மது அருந்தி விட்டு சென்று உடனடியாக கடன் தொகையை கொடுக்க வேண்டும் என்று மிரட்டல் விடுக்கும் வீடியோ சமூக வலை தளத்தில் பரவியது. 

அந்த சமயத்தில் அவர் மருத்துவ விடுப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் மது அருந்தி விட்டு கடன் தொகை வசூலித்த தலைமை காவலர் ஜெய்சங்கரை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து உத்தரவிட்டார்.

Next Story