வெட்டப்பட்ட தென்னை மரங்களை அப்புறப்படுத்த வேண்டும்
வெட்டப்பட்ட தென்னை மரங்களை அப்புறப்படுத்த வேண்டும்
நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட மரங்கள் வெட்டப்பட்ட நிலையில் அவற்றை அகற்ற வேண்டும் என்று சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆக்கிரமிப்பு
தமிழகம் முழுவதிலும் உள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள், கடைகள், வணிக வளாகங்களை அகற்றுவதற்கு கோர்ட்டு உத்தரவிட்டது.அதைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. அந்த வகையில் உடுமலையை சுற்றி உள்ள பகுதியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை குறிப்பிட்ட இடைவெளியில் பல்வேறு துறையினர் இணைந்து அகற்றி வருகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது
ஏழை எளிய பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுமக்கள் நீர்வழிப்பாதையில் வீடுகளையும் நிலமற்ற தொழிலாளர்கள் நீர்வழிப் பாதைகளில் தென்னை போன்றவற்றை நடவு செய்து உள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகள் அதிகாரிகள் ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட அளவீடு செய்யப்பட்டு வருகிறது.அதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிறது.
கோரிக்கை
அதன்பின்னர் அவற்றை அகற்றுவதற்கு முன்வருவதில்லை. மேலும் ஆக்கிரமிப்பு அகற்றபட்ட இடத்தை முழுமையாக கையகப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கவில்லை.இதன் காரணமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் மீண்டும் புதிதாக ஆக்கிரமிப்புகள் தோன்றுவதற்கான சூழல் ஏற்பட்டு உள்ளது. எனவே ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட மரங்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story