வாலிபர் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: முன்விரோதத்தில் துப்பாக்கியால் சுட்டு கொன்றது அம்பலம்


வாலிபர் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: முன்விரோதத்தில் துப்பாக்கியால் சுட்டு கொன்றது அம்பலம்
x

ஓராண்டுக்கு முன்பு நடந்த வாலிபர் தற்ெகாலை வழக்கில் திடீா் திருப்பமாக முன்விரோதத்தில் அவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றது அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக நண்பர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.




சிக்கமகளூரு:

வாலிபர் தற்கொலை

  சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா பிதரே கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராம். இவருடைய மகன் சஞ்சய் (வயது 25). இவர் கடந்த ஆண்டு (2021) மே மாதம் 5-ந்தேதி அந்தப்பகுதியையொட்டி அமைந்துள்ள வனப்பகுதியில் பிணமாக கிடந்தார். 

அப்போது திருமணம் ஆகாத விரக்தியில் சஞ்சய், துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொைல செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து பாலேஒன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

  ஆனால், சஞ்சயின் தந்தை ஜெயராம், தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும் பாலேஒன்னூர் போலீசில் புகார் கொடுத்தார்.

திடீர் திருப்பம்

  அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராகேஷ் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், போலீசார் சஞ்சயின் நண்பர்களான அதேப்பகுதியை சோ்ந்த உதயகுமார், சிக்கமகளூருவை சேர்ந்த சுனில், நித்யானந்தா ஆகியோரை பிடித்து விசாரித்தனா். அவர்களிடம் நடத்திய விசாரணையில் வாலிபர் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

  அதாவது, அவர்கள் தான், சஞ்சயை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து அவரது நண்பர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக அவர்கள் அளித்த வாக்குமூலம் பற்றி போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-

முன்விேராதம் காரணமாக...

  சஞ்சய்க்கும், அவரது நண்பர்களான உதயகுமார், சுனில், நித்யானந்தா ஆகியோருக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன்காரணமாக அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது. இதனால் சஞ்சயை அவரது நண்பர்கள் 3 பேரும் தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். 

அதன்படி, கடந்த ஆண்டு மே மாதம் 5-ந்தேதி சஞ்சய் உள்பட 4 பேரும் வனப்பகுதியில் ஒன்றாக மது அருந்தி உள்ளனர். பின்னர் உதயகுமார் உள்பட 3 பேரும் வனப்பகுதியில் வேட்டைக்கு செல்லலாம் என கூறி சஞ்சயை அழைத்து சென்றனர். 

அப்போது சஞ்சய் தனது தந்தை ஜெயராமின் துப்பாக்கியையும், உதயகுமார் தனது தந்தை புட்டேகவுடாவின் துப்பாக்கியையும் கொாண்டு வந்துள்ளனர். பின்னர், வனப்பகுதியில் ெசன்றதும், உதயகுமார் உள்பட 3 பேரும் சோ்ந்து துப்பாக்கியால் சஞ்சயை சுட்டு ெகான்றுள்ளனர். 

பின்னர் அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ெசன்றுவிட்டனர். பின்னா், திருமணமாகாத விரக்தியில் அவர் தற்கொலை ெசய்துெகாண்டதாக 3 பேரும் தெரிவித்தனர்.
  இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சிறையில் அடைப்பு

  இதையடுத்து போலீசார் கைதான 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வாலிபர் கொலை வழக்கில் துப்பு துலக்கி குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை, போலீஸ் சூப்பிரண்டு அக்‌ஷய் மச்சீந்திரா வெகுவாக பாரட்டினார்.


Next Story