வீடு தீப்பிடித்து எரிந்து நாசம்


வீடு தீப்பிடித்து எரிந்து நாசம்
x
தினத்தந்தி 7 May 2022 9:46 PM IST (Updated: 7 May 2022 9:46 PM IST)
t-max-icont-min-icon

காரைக்காலில் வீடு தீப்பிடித்து எரிந்து நாசமானது.

காரைக்காலை அடுத்த திரு-பட்டினம் போலகம் புதுகாலனியை சேர்ந்தவர் சூசைசேகர். இவரது வீட்டில் திடீரென தீப்பிடித்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் காரைக்கால் நிலைய அதிகாரி மாரிமுத்து தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. விபத்து குறித்து திரு-பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நாக.தியாகராஜன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், ரூ.20 ஆயிரம் நிவாரணமாக வழங்கினார்.


Next Story