தேன்கனிக்கோட்டை அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்


தேன்கனிக்கோட்டை அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்
x
தினத்தந்தி 7 May 2022 10:06 PM IST (Updated: 7 May 2022 10:06 PM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் நடந்தது.

தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே மலை கிராமமான கோட்டையூர் கொல்லை உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் மதுரங்கன். தொழிலாளி. இவருடைய மனைவி மாரி (வயது 26). நிறைமாத கர்ப்பிணியான மாரிக்கு நேற்று காலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் மதுரங்கன் தனது கிராமத்துக்கு, சிறிய ரக 108 ஆம்புலன்சை அழைத்து வந்தார். ஆம்புலன்ஸ் மாரியை ஏற்றி கொண்டு உனிசெட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்தநிலையில் வழியில் அவருக்கு வலி அதிகமானது. இதையடுத்து மருத்துவ உதவியாளர் தமிழ்செல்வன், டிரைவர் சுரேஷ் உதவியுடன் மாரிக்கு பிரசவம் பார்த்தார். அப்போது அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயும், குழந்தையும் உனிசெட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Next Story