விழுப்புரம் உழவர் சந்தையில் கலெக்டர் திடீர் ஆய்வு காகுப்பம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் பார்வையிட்டார்


விழுப்புரம் உழவர் சந்தையில் கலெக்டர் திடீர் ஆய்வு காகுப்பம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 7 May 2022 10:11 PM IST (Updated: 7 May 2022 10:11 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் உழவர் சந்தையில் கலெக்டர் திடீர் ஆய்வு காகுப்பம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் பார்வையிட்டார்

விழுப்புரம்

கலெக்டர் திடீர் ஆய்வு

விழுப்புரத்தில் உள்ள உழவர் சந்தையில் நேற்று காலை மாவட்ட கலெக்டர் மோகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விவசாயிகளிடம் விற்பனை குறித்து கேட்டறிந்ததுடன், பொதுமக்களிடம் பொருட்களின் தன்மை மற்றும் விலை குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து உழவர் சந்தையில் விற்பனை செய்ய வரும் விவசாயிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித்தரும்படி அலுவலர்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுறுத்தியதுடன் உழவர் சந்தை முன்புறத்தில் பொதுமக்களுககு இடையூறு விளைவிக்கும் வகையில் வாகனங்களை நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

எச்சரிக்கை

மேலும் உழவர் சந்தையையொட்டி தனியார் கடை உரிமையாளர்கள் தங்கள் கடையின் முன்பகுதியில் மட்டுமே பொருட்களை வைத்து விற்பனை செய்ய வேண்டும், சாலையோரத்தில் பொருட்கள் வைத்து விற்பனை செய்தால் அவற்றை எடுத்துச்செல்வதோடு கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் எச்சரித்தார்.
அதன் பின்னர் விழுப்புரம் காகுப்பம் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்ட அவர் இங்கு வரும் கழிவுநீரை சுத்தம் செய்யும் பணியை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும் என்றும், அலுவலர்கள் நாள்தோறும் நடைபெறும் பணியை கண்காணித்து உறுதி செய்திட வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது தாசில்தார் ஆனந்தகுமார், நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Next Story