‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 7 May 2022 10:13 PM IST (Updated: 7 May 2022 10:13 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகாருக்கு உடனடி தீர்வு;
பஸ் மீண்டும் இயக்கப்பட்டது

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா தளவாய்புரம், பள்ளத்தூர், குடியிருப்புவிளை, கீழபள்ளிபத்து கஸ்பா, ஜெருசேலம், பள்ளிபத்து கஸ்பா, மேலபள்ளிபத்து, பூச்சிக்காடு, நாதன்கிணறு, கந்தசாமிபுரம், அம்மாள்புரம், குமாரசாமிபுரம் ஆகிய 12 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திருச்செந்தூர்- நாகர்கோவில் (வழித்தடம் எண்- 72 ஏ) அரசு பஸ் கடந்த சில ஆண்டுகளாக இயங்கி வந்தது. தற்போது கடந்த 4 மாதங்களாக இயக்கப்படவில்லை.
எனவே, அந்த பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என்று பூச்சிக்காடு பகுதியைச் சேர்ந்த பொன்ராஜ் என்பவர் ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு கடந்த 4-ந் தேதி செய்தியாக பிரசுரமானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் 12 கிராம மக்களுக்கும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளார்.

காட்சி பொருளான குடிநீர் தொட்டி 

நெல்லை மாவட்டம் மானூர் தாலுகாவுக்கு உட்பட்ட தென்கலம் பஞ்சாயத்து நல்லம்மாள்புரம் 6-வது வார்டில் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி உள்ளது. இந்த குடிநீர் தொட்டியில் கடந்த 2 ஆண்டுகளாக தண்ணீர் நிரப்பப்படாமல் காட்சி பொருளாகவே காணப்படுகிறது. எனவே, குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரேம்குமார், நல்லம்மாள்புரம்.

எரியாத மின்விளக்கு

பாளையங்கோட்டை யூனியன் மேலப்பாட்டம் பஞ்சாயத்து 3-வது வார்டு பிள்ளையார் கோவில் தெருவில் மின்விளக்கு கடந்த சில மாதங்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த தெரு இருளில் மூழ்கி கிடக்கிறது. பொதுமக்கள் வெளியில் வரவும் அச்சப்படுகிறார்கள். ஆகவே, பொதுமக்கள் நலன் கருதி மின்விளக்கு எரிவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
கருப்பசாமி, மேலப்பாட்டம்.

சேறும், சகதியுமான சாலை 

களக்காடு சிதம்பராபுரம் முத்துநகர் காலனி பகுதியில் குடிநீர் குழாய் அமைப்பதற்கு சாலையின் நடுவே குழி தோண்டப்பட்டது. இதனால் அந்த பகுதியில் உள்ள சாலையானது தற்ேபாது பெய்த மழையால் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். ஆகவே, அந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பாரதி, சிதம்பராபுரம்.

மின்விளக்கு வசதி வேண்டும்

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி எதிரே அரசு பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடம் முன் உள்ள பஸ் நிறுத்தத்தில் மின்விளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் அங்கு இருந்து பஸ் ஏற செல்லுபவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். ஆகவே, அந்த பகுதியில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி கொடுத்தால் நன்றாக இருக்கும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரசன்னா, மகாராஜநகர்.

குப்பைகளால் துர்நாற்றம் 

தென்காசி மாவட்டம் களப்பாகுளம் பஞ்சாயத்து பாரதிநகர் குலாலர் தெரு பகுதியில் குப்பை தொட்டி இல்லாததால், தெரு ஓரத்தில் குப்பைகள் கொட்டப்படுகிறது. ஆனால், இந்த குப்பைகள் அப்புறப்படுத்தப்படாமல் கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், அருகில் கோவில் உள்ளதால், அந்த வழியாக செல்லும் பக்தர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே, அந்த பகுதியில் குப்பைகளை அள்ளுவதற்கும், குப்பை தொட்டி வைப்பதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
மாரியப்பன், பாரதிநகர். 

தாழ்வாக தொங்கும் மின்ஒயர் 

ஆலங்குளம் 13-வது வார்டு இந்திராநகரில் மின் ஒயர் ஆபத்தான நிலையில் தாழ்வாக தொங்கிக் கொண்டு இருக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். வாகனங்களும் செல்லவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. எனவே, தாழ்வாக தொங்கும் இந்த மின் ஒயர்களை மேலே உயர்த்தி அமைப்பதற்காக மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
ஆறுமுகராஜ், ஆலங்குளம்.


Next Story