விழுப்புரத்தில் பரபரப்பு ஊழியர்களை தாக்கி டீக்கடை சூறை
விழுப்புரத்தில் பரபரப்பு ஊழியர்களை தாக்கி டீக்கடை சூறை
விழுப்புரம்
விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் பிரபல நிறுவனத்தின் டீக்கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்கு நேற்று முன்தினம் இரவு சிலர் சென்று டீ குடித்துள்ளனர். பின்னர் பணம் கொடுக்கும்போது ஒரு டீயின் விலை ரூ.12 என்று அங்கிருந்த கடை ஊழியர்கள் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், பத்து ரூபாய் டீயை 12 ரூபாய்க்கு எப்படி விற்கலாம் என்று கேட்டு கடை ஊழியர்கள் 2 பேரிடமும் தகராறு செய்ததோடு அவர்களை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியுள்ளனர். மேலும் கடையில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கி சூறையாடினர். இந்த தாக்குதலில் டீக்கடை ஊழியர்கள் 2 பேரும் காயமடைந்தனர். பின்னர் விழுப்புரம் மேற்கு போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து, தாக்குதலில் காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story