நாமக்கல்லில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை


நாமக்கல்லில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 7 May 2022 10:27 PM IST (Updated: 7 May 2022 10:27 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

நாமக்கல்:
நாமக்கல்லில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இளம்பெண்
நாமக்கல் பெரியப்பட்டி பழனியப்பா காலனியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 52). இவருடைய மகள் பிரியதர்ஷினி (27). இவருக்கும், அரியாகவுண்டம்பட்டியை சேர்ந்த ஜெகநாதன் என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 
இந்த நிலையில் கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
விசாரணை
பிரியதர்ஷினி தனது குழந்தைகளுடன் பழனியப்பா காலனியில் வசித்து வந்தார். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்து வந்த அவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
இதுகுறித்து செல்வராஜ் நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story