நகைக்கடன் தள்ளுபடி பட்டியலில் இடம் பெறாதவர்கள் 12-ந் தேதிக்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தகவல்

நகைக்கடன் தள்ளுபடி பட்டியலில் இடம் பெறாதவர்கள் 12-ந் தேதிக்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தகவல்
x
தினத்தந்தி 7 May 2022 10:27 PM IST (Updated: 7 May 2022 10:27 PM IST)
t-max-icont-min-icon

நகைக்கடன் தள்ளுபடி பட்டியலில் இடம் பெறாதவர்கள் 12-ந் தேதிக்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தகவல்

நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வகுமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுன் நகைக்கு உட்பட்டு பெறப்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியானோரின் பெயர் பட்டியல் கடந்த மாதம் 12-ந் தேதி namakkal.nic.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டது. 
இந்த நிலையில் பட்டியலில் இடம்பெறாதோர் அதற்குரிய முறையீட்டை தகுதியானோர் பெயர் பட்டியல் வெளியான ஒரு மாத காலத்திற்குள் நாமக்கல் மண்டல இணைப்பதிவாளர், நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு சரக துணை பதிவாளரிடம் எழுத்துப்பூர்வமாக தகுந்த ஆதாரங்களுடன் மேல்முறையீடு செய்து தீர்வு காணலாம். 
எனவே வருகிற 12-ந் தேதி வரை பெறப்படும் மேல்முறையீடுகள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். அதன் பின்னர் பெறப்படும் மனுக்கள் ஏற்று கொள்ளப்பட மாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story