அருளவாடி அரசு தொடக்கப்பள்ளியில் கலெக்டர் ஆய்வு
அருளவாடி அரசு தொடக்கப்பள்ளியில் கலெக்டர் ஆய்வு செய்தாா்.
திருக்கோவிலூர்,
முகையூர் ஒன்றியம் அருளவாடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கலெக்டர் மோகன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், வகுப்பறையில் இருந்த மாணவ-மாணவிகளிடம் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்ததோடு, கேள்விக்கு சிறப்பாக பதிலளித்த ஒரு மாணவனுக்கு பரிசு வழங்கினார். அதைத்தொடர்ந்து, கலெக்டர் மோகன் பள்ளி சமையல் கூடத்துக்கு சென்று, மாணவர்களுக்கு வழங்குவதற்காக தயார் செய்யப்பட்டிருந்த மதிய உணவை சாப்பிட்டு பார்த்து, அதன் தரம் குறித்து ஆய்வு செய்ததோடு, பணியில் இருந்த சமையலரிடம் சுகாதாரமாகவும், தரமாகவும் உணவு சமைத்து மாணவர்களுக்கு வழங்கவேண்டும் என அறிவுறுத்தினார். முன்னதாக முகையூர் ஒன்றியம் சென்னகுணம் ஊராட்சி பகுதியில் நடைபெற்று வரும் தார் சாலை பணிகளையும் கலெக்டர் மோகன் நேரில் பார்வையிட்டு சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட திட்ட இயக்குனர் சங்கர், முகையூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் சீனுவாசன், சாம்ராஜ், மேலாளர் கண்ணதாசன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story