தாய்க்கு சாப்பாடு கொடுக்காமல் தவிக்க விட்ட மகன்
ஓய்வூதிய பணத்தை பிடுங்கிக்கொண்டு தாய்க்கு சாப்பாடு கொடுக்காமல் தவிக்க விட்ட மகனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்,
நெய்வேலியை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 75). இவர் சம்பவத்தன்று ஹலோ சீனியர் காவல் உதவி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளித்தார். அந்த புகாரில், தனது கணவரின் ஓய்வூதிய பணத்தை தன்னுடைய மகன் பிடுங்கிக் கொண்டு, தனக்கு சாப்பாடு போடாமல் வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டார். அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், நெய்வேலி நகர போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது தனலட்சுமியின் மகன், இனிமேல் தனது தாய்க்கு சரியாக சாப்பாடு கொடுப்பதாகவும், நல்ல முறையில் பார்த்துக் கொள்வதாகவும், எந்த ஒரு பிரச்சினையும் செய்ய மாட்டேன் என போலீசாரிடம் உறுதி அளித்தார். இதையடுத்து போலீசார், தனலட்சுமியை நல்லமுறையில் பார்த்துக் கொள்ளாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story