கோவிலில் உண்டியல் பணம் திருட்டு


கோவிலில் உண்டியல் பணம் திருட்டு
x
தினத்தந்தி 7 May 2022 11:24 PM IST (Updated: 7 May 2022 11:24 PM IST)
t-max-icont-min-icon

சோமநாதபுரம் அருகே கோவிலில் உண்டியல் பணம் திருட்டு நடைபெற்று உள்ளது.

காரைக்குடி,

சோமநாதபுரம் போலீஸ் சரகம் கலிப்புலி பகுதியில் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இரவில் யாரோ கதவு, ஜன்னல் ஆகியவற்றை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி குடம் மற்றும் உண்டியல் ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர்.இதுகுறித்த புகாரின் பேரில் சோமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story