கஞ்சன்ஜங்கா சிகரத்தில் மும்பையை சேர்ந்த மலையேற்ற வீரர் பலி
நேபாள நாட்டின் கஞ்சன்ஜங்கா சிகரத்தில் மும்பையை சேர்ந்த மலையேற்ற வீரர் உயிரிழந்தார்.
மும்பை,
நேபாள நாட்டின் கஞ்சன்ஜங்கா சிகரத்தில் மும்பையை சேர்ந்த மலையேற்ற வீரர் உயிரிழந்தார்.
மலையேற்ற வீரர்
உலகின் உயரமான 8 சிகரங்கள் நேபாள நாட்டில் உள்ளது. இதில் உலகின் 3-வது உயரமான சிகரமான கஞ்சன்ஜங்காவில் ஏற மும்பையை சேர்ந்த மலையேற்ற வீரர் நாராயணன் ஐயர் (வயது52) சென்று இருந்தார். இவர் கடந்த வியாழக்கிழமை சிகரத்தில் சுமார் 8 ஆயிரத்து 200 மீட்டர் உச்சியில் இருந்தார். அப்போது அவர் உடல்நலக்குறைவாக காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட பிறகும் கூட, மலை சிகரத்தில் இறங்க மறுத்து தொடர்ந்து மேலே சென்றதால் தான் நாராயணன் ஐயர் உயிரிழந்ததாக மலையேற்ற ஏற்பாட்டாளர் நிவேஷ் கார்கி கூறியுள்ளார்.
இரங்கல்
நேபாள மலை சிகரத்தில் உயிரிழந்த நாராயணன் ஐயர் மும்பை காட்கோபர் பகுதியை சேர்ந்தவர். திருமணமாகாத இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் சுமார் 15 ஆண்டுகளாக மலையேற்றத்தில் ஈடுபட்டு வந்து உள்ளார்.
இவரது மறைவுக்கு மராட்டியத்தை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் சங்கத்தினர் அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்து உள்ளனர். நாராயணன் ஐயரின் உடல் 2 நாட்களில் மலை சிகரத்தில் இருந்து கீழே கொண்டு வரப்படலாம் என கூறப்படுகிறது.
Related Tags :
Next Story