அனல் பறக்கும் அக்னி வெயில் தகிக்கும் மக்கள்
காரைக்குடி பகுதியில் அக்னி நட்சத்திர வெயில் அனல் பறக்கிறது. இதனால் சாலைகளில் நடமாட முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள்.
காரைக்குடி,
காரைக்குடி பகுதியில் அக்னி நட்சத்திர வெயில் அனல் பறக்கிறது. இதனால் சாலைகளில் நடமாட முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள்.
சுட்டெரிக்கும் வெயில்
பொதுவாக ஆண்டுதோறும் கோடைக்காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.. அதிலும் குறிப்பாக அக்னி நட்சத்திரம் வெயில் காலங்களில் சொல்லவே வேண்டாம். வெயில் உக்கிரமாக இருக்கும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக அக்னி நட்சத்திரத்தன்று வானிலை மாற்றம் காரணமாக மழை பெய்ததால் அவ்வளவாக வெயில் சுட்டெரிக்கவில்லை.
ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே வெயில் சுட்ெடரிக்க தொடங்கியது. ஏப்ரல் மாதத்தில் மேலும் சுட்டெரித்தது. இந்த நிலையில் அவ்வப்போது வெப்ப சலனம் காரணமாக ஒரிரு இடங்களில் மழை பெய்தது.
குடைகளுடன் செல்லும் பொதுமக்கள்
கடந்த 4-ந்தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமானது. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துகிறது. நேற்று 102 டிகிரி வெயில் அடித்தது.
காரைக்குடி பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் பகலில் 10 மணிக்கு மேல் மாலை 3 மணி வரை வெளியே நடமாடுபவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து விட்டது. சாலையில் நடமாடும் பெண்கள், பொதுமக்கள் குடைகளுடன் நடமாட தொடங்கி விட்டனர். சில இளம்பெண்கள் தங்கள் துப்பட்டாவால் முகத்ைத மூடி கொண்டு செல்கின்றனர்.
தொடர் வெயில் காரணமாக குளிர்பான கடைகளில் தாகம் தீர்க்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆங்காங்கே பொதுமக்களின் தாகத்தை தணிப்பதற்காக தர்ப்பூசணி, சர்பத், நுங்கு கடைகள் புற்றீசல் போல முளைத்து உள்ளன.
தற்போது அக்னி நட்சத்திரம் முடியும் வரை பகலில் முடிந்தவரை பொதுமக்கள் வெளியே நடமாட வேண்டாம். கூடுதலாக தண்ணீர் குடிக்கும்படியும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
Related Tags :
Next Story