முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 8 May 2022 12:12 AM IST (Updated: 8 May 2022 12:12 AM IST)
t-max-icont-min-icon

முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது

நொய்யல்
புன்னம்சத்திரம் அருகே பாலமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. 
வேலாயுதம்பாளையத்தில் உள்ள புகழிமலை பாலசுப்பிரமணியர் கோவிலில் சித்திரை மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல காகிதபுரம் சுப்பிரமணியர், பவித்திரம், வெண்ணெய்மலை முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story