தினத்தந்தி புகார் பெட்டி


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 8 May 2022 12:22 AM IST (Updated: 8 May 2022 12:22 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பஸ் வசதி வேண்டும்
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், தோகைமலை ஒன்றியம் முதலைப்பட்டி கிராமத்தில் சுமார் 1500 குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்திற்கு குளித்தலையில் இருந்தும் தோகைமலையில் இருந்தும் பஸ் வசதி கிடையாது. இதனால் கிராம மக்கள் குளித்தலை வட்டாட்சியர் அலுவலகம், தோகைமலை ஒன்றிய அலுவலகம் செல்லவேண்டுமானால் திருச்சி சென்று தான் போக வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் சுமார் 30 கிலோமீட்டர் தூரம் அலைய வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே முதலைப்பட்டி கிராமத்திற்கு குளித்தலையில் இருந்தும் தோகைமலையிலிருந்தும்  பஸ்கள் இயக்க போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
முருகன், குளித்தலை, கரூர்.


குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்
தளவாபாளையம் அருகே அய்யம்பாளையம் மெயின் ரோட்டில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. டாஸ்மாக் கடையிலிருந்து மது பிரியர்கள் மது பாட்டிலை வாங்கி வந்து மலையம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள விவசாய தோட்டம் அருகே அமர்ந்து மது அருந்தி விட்டு பாட்டில்களை உடைத்து விட்டு தாங்கள் கொண்டு வந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டு விட்டு அங்கேயே பிளாஸ்டிக் கவர்களை போட்டுவிட்டு சென்று விடுகின்றனர். அந்த வழியாக செல்பவர்களுக்கு மது பாட்டில் குத்தி காயம் ஏற்பட்டு வருகிறது. மேலும் விவசாய தோட்டங்களுக்குள் மது பாட்டில்களை வீசி உடைப்பதால் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், அய்யயம்பாளையம் ,கரூர்.

Next Story