தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி, பொதுமக்கள் குறைகள் பற்றிய பதிவுகள்
மாடு மேய்க்கும் இடமான பள்ளி வளாகம்
திருவண்ணாமலை-செங்கம் சாலையில் சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் திருவண்ணாமலை நகரம் மட்டுமின்றி அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த மாணவர்களும் படித்து வருகின்றனர். இப்பள்ளி பொதுத் தேர்வு நடக்கும் மையமாகவும் உள்ளது. பள்ளி வளாகத்தில் மாடுகள் மேய்ந்து வருகின்றன. இதனால் பள்ளி வளாகத்தில் சுகாதாரமற்ற நிலை ஏற்படுகிறது. ஒருசில நேரத்தில் மாடுகள் ஒன்றுக்கொன்று முட்டிக்கொண்டு சண்டையிடும்போது மாணவர்களுக்கு இடையூறாகவும், அச்சமாகவும் உள்ளது. மாடுகள் பள்ளி வளாகத்துக்குள் வராமல் தடுக்க வேண்டும்.
-ராஜன், திருவண்ணாமலை.
கழிவுநீர் கால்வாய் வசதி தேவை
திருப்பத்தூர் மாவட்டம் குரும்பகேரிபுதூர் கிராமத்தில் வசிக்கும் மக்கள் வீடுகளில் இருந்து வெளிேயற்றுகின்ற கழிவுநீர் அருகில் உள்ள விளை நிலங்களுக்குள் ஓடி ஓரிடத்தில் தேங்கி குட்டைபோல் காட்சியளிக்கிறது. கிராமத்தில் கால்வாய் கட்டி அருகில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் கழிவுநீர் ஓடி தேங்குமாறு செய்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஏ.உதயசெல்விஆறுமுகம், தாதவள்ளி.
நீதிமன்றம் அமைக்க வேண்டும்
பேரணாம்பட்டு நகரில் மக்கள் தொகை பெருகி விட்டது. பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் பதிவாகும் பல வழக்குகளுக்கு ஊரில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிற குடியாத்தம் நடுவர் நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டி உள்ளது. எனவே பொதுமக்களின் சிரமத்தைப் போக்க தாசில்தாரும், தமிழக அரசும் நடவடிக்கை எடுத்து பேரணாம்பட்டு நகரில் நடுவர் நீதிமன்றம் அமைத்தால் பொதுமக்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதி உடனடியாகக் கிடைக்கும்.
-ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு.
சாலை குறுகி விட்டதால் இடையூறு
வேலூரில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணி குளறுபடியால் 23 அடி அகலமாக இருந்த சாலையில் இரு புறமும் நடைமேடை அமைத்ததால் 15 அடி சாலையாகச் சாலை குறுகி விட்டது. இதனால் 4 சக்கர வாகனங்கள் ெசல்வதற்கும், வாகனங்களை நிறுத்துவதற்கும் இடையூறாக உள்ளது. இந்தக் குறுகிய சாலையை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யலாம். மேலும் நடைமேடையின் அகலத்தைக் குறைத்து, சாலையை சற்று விரிவாகப் போடலாம் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு. அதிகாரிகள் செய்வார்களா?
-ர.குப்புராஜ், சத்துவாச்சாரி.
மின்கம்பம் சேதம்
திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூர் கிராமத்தில் 5-வது வார்டு மாரியம்மன் கோவில் தெருவில் ஒரு இரும்புக்குழாய் மின்கம்பம் உள்ளது. அதன் அடிபாகம் சேதம் அடைந்துள்ளது. காற்று பலமாக வீசினால் மின்கம்பம் கீழே சாய்ந்து விடும். ஆபத்து ஏற்படும் முன் மின்கம்பத்தை மாற்றியமைக்க மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-இளையரசு, ஆதியூர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா அகரம்ேசரி ஊராட்சி 3-வது வார்டில் உள்ள ஒரு தெருவில் மின்கம்பம் கடுமையாகச் சேதம் அடைந்துள்ளது. மின்கம்பத்தை மாற்றி அமைக்கக் கோரி மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மின்கம்பம் எந்நேரமும் கீழே விழலாம். அசம்பாவிதம் நடக்கும் முன் சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
-விமல்திவாகர், அகரம்சேரி.
ஆரணி பெரிய கடைவீதியில் பாப்பாத்தியம்மன் கோவில் அருகில் ஆபத்தான நிலையில் ஒரு மின் கம்பம் உள்ளது. அதில் அதிக மின் இணைப்புகளும் உள்ளன. மின்கம்பத்தின் அடிபகுதியில் சேதம் அடைந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. காற்று அடித்தால் மின்கம்பம் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. அந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
-குேபந்திரன், ஆரணி.
சூதாட்டம், மது விற்பனையை தடுக்க வேண்டும்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் காட்டன் சூதாட்டம், 3 சீட்டு, டாஸ்மாக் மதுபானங்களை வாங்கி வந்து வெளிமார்க்ெகட்டில் கூடுதல் விலைக்கு விற்பது போன்ற குற்றச் செயல்கள் நடந்து வருகிறது. இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுத்து சூதாட்டம் மற்றும் மதுபானம் விற்பனையை தடுக்க வேண்டும்.
-அப்துல்சமது, ஆற்காடு.
Related Tags :
Next Story