தகுதியானவர்களை நியமித்து குடிநீரின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும்


தகுதியானவர்களை நியமித்து குடிநீரின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 8 May 2022 1:00 AM IST (Updated: 8 May 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசின் குடிநீர் வடிகால் வாரிய ஆய்வகங்களில் தகுதியானவர்களை நியமித்து குடிநீரின் தரத்தை முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய சி.ஐ.டி.யு. தொழிற் சங்க மாநில பொதுச்செயலாளர் ஆத்மநாதன் வலியுறுத்தினார்.

விருதுநகர், 
தமிழக அரசின் குடிநீர் வடிகால் வாரிய ஆய்வகங்களில் தகுதியானவர்களை நியமித்து குடிநீரின் தரத்தை முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய சி.ஐ.டி.யு. தொழிற் சங்க மாநில பொதுச்செயலாளர் ஆத்மநாதன் வலியுறுத்தினார். 
பேட்டி 
இதுகுறித்து அவர் விருதுநகரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- 
குடிநீர் வடிகால் வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ. 17,400 ஊதியம் வழங்க வேண்டிய நிலையில் குடிநீர் வடிகால் வாரியம் ரூ.13 ஆயிரம் ஊதியம் வழங்கியதற்கான தடையாணை  பெறப்பட்டது. ஆனால் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தடையாணையை விலக்கி தொடர்ந்து ரூ.13ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும்.
 1,100 தொழிலாளர்களுக்கு ஊதிய மறுநிர்ணயம் செய்த நிலையில் அதற்காக அரசு வழங்கியுள்ள ரூ. 96 கோடியை குடிநீர் வடிகால் வாரியம் வேறு பணிக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை தவிர்த்து மறு நிர்ணயம் செய்யப்பட்ட ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
அகவிலைப்படி உயர்வு 
மேலும் குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதிய பணியாளர்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வு வழங்குவதுடன் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும். குடிநீர் வடிகால் வாரிய ஆய்வகங்களில் தகுதியான நபர்கனை நியமித்து குடிநீரின் தரத்தை முறையாக ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 இவ்வாறு அவர் கூறினார். 
 இதனை தொடர்ந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் மாநில உதவித் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில நிர்வாகிகள் பாலகுமார், ஆத்மநாதன், அழகுமலை மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு தீர்மானங்கள் அரசை வலியுறுத்துவதற்காக நிறைவேற்றப்பட்டன.


Next Story