வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 8 May 2022 1:10 AM IST (Updated: 8 May 2022 4:52 PM IST)
t-max-icont-min-icon

வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே வல்லம் செல்வவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் திருமலை. இவருடைய மகன் சிவசுப்பிரமணியன் (வயது 32). கூலி தொழிலாளியான இவர் சம்பவத்தன்று செங்கோட்டை- வல்லம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அங்குள்ள ஆற்றுப்பாலத்தின் தடுப்பு சுவரில் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த சிவசுப்பிரமணியனை நெல்லை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சிவசுப்பிரமணியனுக்கு மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.

Next Story