ஒரே ெரயில் என்ஜினில் சிக்கி 2 வாலிபர்கள் பலி
கும்பகோணம் அருகே தனித்தனி விபத்துகளில் ஒரே ரெயில் என்ஜினில் சிக்கி 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே தனித்தனி விபத்துகளில் ஒரே ரெயில் என்ஜினில் சிக்கி 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தனியார் நிதி நிறுவன ஊழியர்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அந்தமங்கலம் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகன் சுரேஷ் (வயது 30). இவர், கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் சுரேஷ் தான் வேலை பார்க்கும் நிதி நிறுவனத்தை சேர்ந்த உயர் அதிகாரிகள் 2 பேரை கும்பகோணம் பஸ் நிலையத்தில் இருந்து பஸ் ஏற்றி சேலத்திற்கு வழி அனுப்பி வைத்துள்ளார்.
ரெயில் என்ஜின் மோதி பலி
பின்னர் கும்பகோணம் மேம்பாலத்திற்கு கீழே தனது பைக்கை நிறுத்தி விட்டு அந்த பகுதியில் உள்ள ெரயில் தண்டவாளத்தை சுரேஷ் கடக்க முயன்றுள்ளார். அப்போது திருச்சியில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்து கொண்டிருந்த ரெயில் என்ஜின் மோதியதில் சுரேஷ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார்.
வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த சிலர் கும்பகோணம் ெரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ெரயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் சுரேஷின் சிதறிய உடல் பாகங்களை சேகரித்து பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மற்றொருவர் பலி
இந்த நிலையில் சுரேஷ் மீது மோதிய அதே ரெயில் என்ஜின் நேற்று நள்ளிரவு 1.40 மணிக்கு திருவிடைமருதூர் அருகே வந்துகொண்டிருந்தது. அப்போது திருவிடைமருதூர் புதுத்தெரு பகுதியை சேர்ந்த போட்டோகிராபர் மணிகண்டன்(32) என்பவர் அந்த பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்போது அதே ெரயில் என்ஜினில் சிக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து தகவல் அறிந்த ெரயில்வே போலீசார் இது குறித்து தங்களது உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸ் அதிகாரி விசாரணை
தகவல் அறிந்ததும் ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு மகாதேவன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒரே நேரத்தில் 2 வாலிபர்கள் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்.
தனித்தனியாக நடந்த விபத்துகளில் 2 வாலிபர்கள் ஒரே ரெயில் என்ஜினில் சிக்கி பலியானதற்கான காரணம் என்ன? ெரயில் என்ஜினில் முகப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்ததா? அல்லது என்ஜின் வருவது தெரியாமல் வாலிபர்கள் தண்டவாளத்தை கடக்க முயன்றதால் ெரயிலில் அடிபட்டு உயிர் இழந்தனரா? என்பது குறித்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story