பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டு போராட்டம்


பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 8 May 2022 1:20 AM IST (Updated: 8 May 2022 1:20 AM IST)
t-max-icont-min-icon

பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டு போராட்டம்

திருச்சி, மே.8-
திருச்சியில் உள்ள ஒரு நகைக்கடையில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில்  நகைச்சீட்டு, பரிசு கூப்பன், நகை இரட்டிப்பு என பல்வேறு கவர்ச்சி திட்டங்ளை அறிவித்து இருந்தனர். இதனை நம்பி பலர் பணம் கட்டினர். ஆனால், அவர்கள் அறிவித்தப்படி செயல்படவில்லை.
இதனால் ஏமாற்றப்பட்ட வாடிக்கையாளர்கள் நேற்று முன்தினம் கடையை முற்றுகையிட்டதுடன், நகைக்கடையின் நிர்வாகிகள் அலுவலகத்திலும் தாங்கள் செலுத்தி ஏமாந்த தொகையினை உடனடியாக வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு 10 மணி வரை கடை நிர்வாகிகள் வரவில்லை. இதனால் தொடர்ந்து அவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்பின்னரும் யாரும் வராததால் அவர்கள் கலைந்து சென்றனர். மேலும் இந்த நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து பலகோடி ரூபாய் ஏமாற்றி சுருட்டிவிட்டதாகவும், இதனைமீட்டுபொதுமக்களிடம் ஒப்படைக்க காவல்துறை மற்றும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Next Story