மாயமான மூதாட்டி கிணற்றில் பிணமாக மீட்பு


மாயமான மூதாட்டி கிணற்றில் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 8 May 2022 1:26 AM IST (Updated: 8 May 2022 1:26 AM IST)
t-max-icont-min-icon

மாயமான மூதாட்டி கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார்.

குடியாத்தம்

மாயமான மூதாட்டி கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார்.

குடியாத்தம் ெரயில் நிலையம் அருகே உள்ள பார்வதிபுரம் கிராமத்தில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் பெண் உடல் ஒன்று மிதந்தது. தகவல் அறிந்த குடியாத்தம் நகர போலீசார் தீயணைப்பு படையினருடன் சென்று பெண்ணின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் தண்டபாணி உள்ளிட்ட போலீசார் நடத்திய விசாரணையில் இறந்த பெண் குடியாத்தத்தை அடுத்த 

ஐதர்புரம்பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மனைவி   முனியம்மா ள் (வயது 70) என்பதும் சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பாத நிலையில் கிணற்றில் பிணமாக மிதந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து முனியம்மளின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சாவுக்கான காரணம் குறித்து போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story