நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
அதிராம்பட்டினம் கடற்பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
அதிராம்பட்டினம்:
அதிராம்பட்டினம் கடற்பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
நாட்டுப்படகு மீனவர்கள்
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், தம்பிக்கோட்டை, மறவக்காடு, கரையூர் தெரு, காந்திநகர், ஆறுமுக கிட்டங்கி தெரு, தரகர் தெரு, கடற்கரைதெரு, ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் உள்ளிட்ட கடற்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மூலம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
மீன்வரத்து குறைவு
தற்போது மீன்பிடி தடைக்காலம் என்பதால் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. ஆனால் நாட்டுப்படகுகள் மற்றும் கட்டுமரங்கள் மூலம் மீன்பிடி தொழில் செய்யும் மீனவர்கள் மட்டுமே கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இதனால் மிகக்குறைந்த அளவே மீன்வரத்து உள்ளதால் மீன் ஏற்றுமதி தொழில் மற்றும் உள்ளூர் மார்க்கெட்டுக்கு வரும் மீன்வரத்து மிகவும் குறைந்துள்ளது.
கடலுக்கு செல்லவில்லை
நேற்று அதிகாலை பலத்த காற்றுடன் அதிராம்பட்டினம் கடற்கரை பகுதிகளில் மழை பெய்தது. இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதன் காரணமாக நாட்டுப்படகு மீனவர்கள் தங்களது படகுகளை துறைமுக வாய்க்காலில் நிறுத்தி் வைத்திருந்தனர்.
Related Tags :
Next Story