துப்பாக்கியை காட்டி மிரட்டிய வழக்கில் 2 பேருக்கு ஜாமீன்
துப்பாக்கியை காட்டி மிரட்டிய வழக்கில் 2 பேருக்கு ஜாமீன்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மதுரை
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் நள்ளிரவில் துப்பாக்கியை காட்டி அங்கிருந்த ஊழியர்களை மிரட்டிய வழக்கில் தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சிவகுருநாதபுரத்தை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 38), அதே ஊரைச் சேர்ந்த முத்துக்குமார் (34) பொன்ராஜ் (28) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முத்துக்குமார் மற்றும் பொன்ராஜ் ஆகிய இருவரும் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும், கோர்ட்டு விதிக்கும் எந்த நிபந்தனைக்கும் கட்டுப்படுவோம் என்று கூறி மதுரை ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், மனுதாரர்கள் பயன்படுத்திய ஏர்கன் (துப்பாக்கி) மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விட்டது. யாருக்கும் படுகாயம் இல்லை என தெரிகிறது. எனவே மனுதாரர்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்கப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டார்
Related Tags :
Next Story