பாளையங்கோட்டை மகாராஜநகருக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் இடமாற்றம்
பாளையங்கோட்டை மகாராஜநகருக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டது.
நெல்லை:
நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு புறக்காவல் நிலையம் பாளையங்கோட்டை போலீஸ் நிலைய கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்தது. நகர்ப்பகுதி விரிவாக்கத்தால் ஐகிரவுண்டு புறக்காவல் நிலையம் புதிய போலீஸ் நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது. நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீஸ் நிலையம் என்று பெயர் சூட்டப்பட்டது.
அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் செயல்பட்டு வந்த இந்த போலீஸ் நிலையம் பின்னர் உழவர் சந்தை அருகில் தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்தது. இதையொட்டி ஐகிரவுண்டு அருகே மகாராஜநகர் ரவுண்டானாவில் 3 தளங்களை கொண்ட புதிய போலீஸ் நிலையம் கட்டி முடிக்கப்பட்டது. சமீபத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த போலீஸ் நிலையத்தை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்த போலீஸ் நிலையம் நேற்று புதிய கட்டிடத்தின் தரை தளத்தில் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மேலும் முதலாவது தளத்துக்கு, பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் செயல்பட்டு வந்த பாளையங்கோட்டை நகர அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டு செயல்படத் தொடங்கி உள்ளது. மேலும் அங்கு பாளையங்கோட்டை போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகமும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
Related Tags :
Next Story