91 இன்ஸ்பெக்டர்கள் துணை போலீஸ் சூப்பிரண்டுகளாக பதவி உயர்வு
தமிழகம் முழுவதும் 91 இன்ஸ்பெக்டர்களை துணை போலீஸ் சூப்பிரண்டுகளாக பதவி உயர்வு அளித்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
வேலூர்
தமிழகம் முழுவதும் 91 இன்ஸ்பெக்டர்களை துணை போலீஸ் சூப்பிரண்டுகளாக பதவி உயர்வு அளித்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் எல்லையில் பதவி உயர்வு பெற்ற இன்ஸ்பெக்டர்கள் விவரமும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்களும் வருமாறு:-
வேலூர் தாலுகா இன்ஸ்பெக்டர் நிலவழகன் திருப்பத்தூர் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாகவும், சென்னை பெருநகரம் ராஜமங்கலம் இன்ஸ்பெக்டர் தங்கதுரை திருப்பத்தூர் மாவட்ட குற்ற ஆவண காப்பக துணை போலீஸ் சூப்பிரண்டாகவும், தர்மபுரி மாவட்டம் மாதிக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் அம்மாதுரை திருப்பத்தூர் மாவட்ட பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்புப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாகவும், திருநெல்வேலி பேட்டை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர் ராணிப்பேட்டை மாவட்ட குற்ற ஆவண காப்பகப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று வேலூர் தெற்கு சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வேலூர் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாகவும், திருப்பத்தூர் தாலுகா இன்ஸ்பெக்டர் திருமால் கோவை போதைப்பொருள் தடுப்புப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாகவும், ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி நீலகிரி மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாகவும், திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் திருப்பத்தூர் 'கியூ' பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story