இடையன்குடியில் அரசு சார்பில் பிஷப் கால்டுவெல் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
இடையன்குடியில் அரசு சார்பில் பிஷப் கால்டுவெல் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திசையன்விளை:
தமிழ் மொழிக்கு ஒப்பிலக்கணம் எழுதிய பிஷப் கால்டுவெல் நினைவு இல்லம் திசையன்விளை அருகே இடையன்குடியில் உள்ளது. இங்கு நேற்று அவரது 208-வது பிறந்தநாள் விழா அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. நினைவு இல்லத்தில் உள்ள பிஷப் கால்டுவெல் சிலைக்கு நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், சேரன்மாதேவி உதவி கலெக்டர் சிந்து, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், திசையன்விளை தாசில்தார் செல்வகுமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து பிஷப் கால்டுவெல் சிலைக்கு நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார், மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் அமுதா கார்த்திகேயன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Related Tags :
Next Story