திமுக ஓராண்டு சாதனையையொட்டி 1000 மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்
தி.மு.க.ஓராண்டு சாதனையையொட்டி 1000 மரக்கன்றுகள் நடும் பணி தொடக்க விழாவில் கதிர்ஆனந்த் எம்.பி., மேயர் சுஜாதா ஆகியோர் பங்கேற்றனர்.
வேலூர்
தி.மு.க.ஓராண்டு சாதனையையொட்டி 1000 மரக்கன்றுகள் நடும் பணி தொடக்க விழாவில் கதிர்ஆனந்த் எம்.பி., மேயர் சுஜாதா ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைகிறது. இதையொட்டி அரசின் ஓராண்டு சாதனையை வரவேற்று வேலூர் மாநகராட்சி சார்பில் நகர்ப்புற காடு வளர்ப்பு திட்டத்தின்கீழ் 1,000 மரக்கன்றுகள் நடும் பணி தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. வேலூர் சார்பனாமேடு குடிநீர் தொட்டி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு
வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா தலைமை தாங்கினார்.
மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், துணை மேயர் சுனில்குமார், வேலூர் மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் முகமதுசகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், சிறப்பு அழைப்பாளராக டி.எம்.கதிர்ஆனந்த் எம்.பி. கலந்து கொண்டு மரக்கன்றை நட்டு 1,000 மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.
நகர்ப்புற காடு வளர்ப்பு திட்டத்தில் ஆலமரம், அரசமரம், வேப்பமரம் உள்ளிட்ட பல்வேறு வகையான 1,000 மரக்கன்றுகள் வாங்கப்பட்டு, 1 ஏக்கர் காலி இடத்தில் முதற்கட்டமாக நடப்பட்டுள்ளன. மீதமுள்ள மரக்கன்றுகள் மாநகராட்சிக்கு உட்பட்ட வேறு பகுதியில் நடப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில், கவுன்சிலர் கங்கா, பகுதி செயலாளர் சுந்தரவிஜி, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story