தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே களியங்காடு நெசவாளர் காலனியை சேர்ந்தவர் ஆனந்த ராமன் (வயது 52). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார். ஆனந்த ராமனுக்கு திருமணமாகவில்லை. இதனால் அவர் மன வருத்தத்தில் இருந்து வந்தார்.
பின்னர் வடசேரியில் உள்ள பள்ளிக்கூட தெருவில் வசிக்கும் உறவினரின் வாடகை வீட்டில் ஆனந்தராமன் தங்கி வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் உள்ள ஒரு அறையில் ஆனந்தராமன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த வடசேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story