சேலம் அப்பா பைத்தியசாமி கோவிலில் புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி வழிபாடு
சேலம் அப்பா பைத்தியசாமி கோவிலில் புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி வழிபாடு செய்தார்.
சூரமங்கலம்:
என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், புதுச்சேரி முதல்-அமைச்சருமான ரங்கசாமி சூரமங்கலம் அப்பா பைத்தியசாமி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம், அதன்படி நேற்று இரவு 9.20 மணியளவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி அப்பா பைத்தியசாமி கோவிலுக்கு வந்தார். அங்கு அவருக்கு கோவில் நிர்வாகத்தினர் சார்பில் மாலை அணிவித்து வரவேற்றனர். தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் அவர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து வழிபாடு நடத்திய பின்னர் அவர் சேலத்தில் இருந்து புறப்பட்டு புதுச்சேரிக்கு சென்றார்.
Related Tags :
Next Story