கொளத்தூர் அருகே பஸ் டிரைவரை கொலை செய்தது ஏன்?-கைதான ஐ.டி. நிறுவன ஊழியர் பரபரப்பு வாக்குமூலம்
கொளத்தூர் அருகே பஸ் டிரைவரை கொலை செய்தது ஏன்? என கைதான ஐ.டி.நிறுவன ஊழியர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கொளத்தூர்:
கொளத்தூர் அருகே பஸ் டிரைவரை கொலை செய்தது ஏன்? என கைதான ஐ.டி.நிறுவன ஊழியர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
பஸ் டிரைவர்
கொளத்தூர் அருகே உள்ள பாலவாடியை சேர்ந்தவர் பொன்குமார் (வயது 37). இவர் தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொன்குமார் சம்மட்டியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக அதே ஊரை சேர்ந்த குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவான செல்வகுமார் (36) என்பவரை நேற்று முன்தினம் நள்ளிரவில் கொளத்தூர் போலீசார் கைது செய்தனர்.
வாக்குமூலம்
தொடர்ந்து போலீசில் செல்வகுமார் அளித்த பரபரப்பு வாக்குமூலம் விவரம் வருமாறு:-
நான் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தேன். பாலவாடிக்கு வரும் போது, எனக்கும் எனது மனைவிக்கும் அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டு வந்தது. அப்போது அருகில் வசிக்கும் எனது மனைவியின் உறவினராக பொன்குமார் வந்து தட்டிக்கேட்டார். ஒவ்வொரு முறையும் என் விஷயத்தில் தலையிட்டு வந்தார். இது எனக்கு பிடிக்கவில்லை. இந்த நிலையில் சம்பவத்தன்று சென்னையில் இருந்து வந்த நாள் பொன்குமாரை அடித்து தாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவருடைய வீட்டுக்கு குடிபோதையில் குமாருடன் சென்றேன். அங்கு தூங்கிக்கொண்டிருந்த பொன்குமாரின் தலையில் குழாயால் அடித்தேன். பின்னர் எனது வீட்டுக்கு வந்துவிட்டேன்.
பொன்குமார் இறந்து விட்டார் என்பது எனக்கு தெரியாது. காலையில் பொன்குமார் தன்னிடம் வீட்டுக்கு சண்டைக்கு வருவார் என்ற பயத்தில் நான் அங்கிருந்து வெளியே சென்று விட்டேன். தற்போது போலீஸ் பிடியில் சிக்கிக் கொண்டேன்
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story