அந்தியூர், சென்னிமலை பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை


அந்தியூர், சென்னிமலை பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை
x
தினத்தந்தி 8 May 2022 3:27 AM IST (Updated: 8 May 2022 3:27 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர், சென்னிமலை பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

ஈரோடு
அந்தியூர், சென்னிமலை பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. 
அந்தியூர்
அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் தாமரைக்கரை, ஈரெட்டி, தேவர்மலை உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று பகலில் நல்ல  வெயில் அடித்தது. இந்த நிலையில் இரவு 7.30 மணி முதல் 8.30 மணி இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதேபோல் அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல், வேம்பத்தி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு 7.30 மணிக்கு சூறாவளிக்காற்று வீசியது. இதனால் பஸ் நிலையம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த விளம்பர தட்டிகள் சூறாவளிக்காற்றில் தூக்கி வீசப்பட்டு பறந்தன. அதுமட்டுமின்றி பல்வேறு இடங்களில் வீட்டின் மேற்கூரைகள் சூறாவளிக்காற்றில் பறந்தன. இதைத்தொடர்ந்து 8 மணி முதல் 8.30 மணி வரை இடி, மின்னலுடன் சாரல் மழை பெய்தது. சூறாவளிக்காற்று காரணமாக அந்தியூர் பகுதியில் மின்சாரம் தடைபட்டது. 
சென்னிமலை
சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு 8.30 மணி அளவில் இடி, மின்னலுடன் பலத்த காற்று வீசியது. அப்போது மழையும் பெய்தது. பலத்த காற்று வீசியதால் சென்னிமலையில் காங்கேயம் ரோட்டில் உள்ள ஒரு மேல் மாடியில் அமைக்கப்பட்டு இருந்த தனியாருக்கு சொந்தமான சுமார் 70 அடி உயரம் உள்ள இணையதள சேவை கோபுரம் திடீெரன சாய்ந்து தார் ரோட்டில் விழுந்தது. அப்போது நல்லவேளையாக யாரும் இல்லாததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. பலத்த காற்று வீசியதால் மின்தடையும் ஏற்பட்டிருந்தது. இதனால் சென்னிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதி இருளில் மூழ்கியது.

Related Tags :
Next Story