எலெக்ட்ரானிக் கடையில் புகுந்து ரூ.4 லட்சம் பொருட்கள், பணம் திருட்டு;மர்மநபர்களுக்கு வலைவீச்சு
உப்பள்ளி டவுனில் எலெக்ட்ரானிக் கடையில் புகுந்து ரூ.4 லட்சம் பொருட்கள், பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்
உப்பள்ளி: உப்பள்ளி டவுனில் எலெக்ட்ரானிக் கடையில் புகுந்து ரூ.4 லட்சம் பொருட்கள், பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
எலெக்ட்ரானிக் கடையில் புகுந்து...
தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் கேசுவாப்பூர் அருகே சுபாஷ் நகர் பகுதியில் ரவி முத்தோல் என்பவர் எலெக்ட்ரானிக் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் வியாபாரத்தை முடித்த ரவி, கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
இந்த நிலையில் நள்ளிரவில் மர்மநபர்கள், ரவியின் எலெக்ட்ரானிக் கடையின் ஷெட்டரை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் மர்மநபர்கள் கடையில் கல்லாப்பெட்டியில் இருந்த பணம் மற்றும் மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களை திருடி எடுத்து சென்றுள்ளனர்.
ரூ.4 லட்சம் மதிப்பு
வழக்கம்போல் இன்று காலை ரவி கடையை திறக்க வந்தார். அப்போது ரவி கடையின் ஷெட்டர் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் கடைக்குள் சென்று பார்த்தார்.
அப்போது கடையில் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.1 லட்சம் மற்றும் மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போய் உள்ளது.
இதன் மொத்த மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும். அப்போது தான் ரவிக்கு, மர்மநபர்கள் கடையின் ஷெட்டரை உடைத்து உள்ளே புகுந்து பணம், பொருட்களை திருடிச் சென்றது தெரியவந்தது.
வலைவீச்சு
இதுகுறித்து ரவி, கேசுவாப்பூர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் கடைக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் மோப்ப நாயை வரவழைத்து சோதனை நடத்தினர். அப்போது மோப்ப நாய் மோப்பம் பிடித்து சிறிதுதூரம் ஓடிநின்றுவிட்டது. ஆனால் அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
தடயவியல் நிபுணர்கள் வந்து கடையில் பதிவான மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர்.
இதுகுறித்து கேசுவாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டனர். மேலும் மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story