தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 2 ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 2 ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
புயல்
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அசானி புயலாக மாறி தென்கிழக்கு வங்கக்கடலில் அந்தமான், நிக்கோபர் தீவுகள் அருகே நிலைகொண்டு உள்ளது.இது தொடரந்து ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதனால் நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆங்காங்கே சில இடங்களில் பலத்த மழை பெய்தது.
எச்சரிக்கை கூண்டு
நேற்று காலையில் நல்ல வெயில் அடித்தது. மதியத்துக்கு பிறகு வெயிலின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது. மாலையில் லேசான மேகமூட்டம் காணப்பட்டது. மேலும் அசானி புயல் குறித்து, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கு அறிவிக்கும் வகையில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று ஏற்றப்பட்டது. தொடர்ந்து கப்பல்கள் புயல் உள்ள பகுதிகளில் செல்லாமல் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளன.
Related Tags :
Next Story