பழுதாகி நின்ற மினிலாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து


பழுதாகி நின்ற மினிலாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து
x
தினத்தந்தி 8 May 2022 5:56 PM IST (Updated: 8 May 2022 5:56 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி அருகே பழுதாகி நின்ற மினிலாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்துக்குள்ளானது.

வாணியம்பாடி

ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து டிரைவர் வெங்கடேசன் என்பவர் ஒரு மினி லாரியில் 50 பெட்டிகளில் 2 டன் எடையிலான மீன்களை ஏற்றிக்கொண்டு வாணியம்பாடி வழியாக கிருஷ்ணகிரியை நோக்கி சென்று கொண்டிருந்தார். 

வாணியம்பாடிைய அடுத்த செட்டியப்பனூர் பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலம் மீது மினி லாரி சென்றது. அப்போது திடீெரன மினிலாரியின் டயர் வெடித்து பழுதாகி நின்றது. உடனே டிரைவர் வெங்கடேசனும், அவருடன் வந்த உதவியாளரும் ேசர்ந்து டயரை மாற்றும் பணியில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த வழியாகச் சென்ற மற்றொரு லாரி, பழுதாகி நின்ற மினி லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. அதில் மீன் பாரம் ஏற்றிய பழுதாகி நின்ற மினிலாரி சாலையில் கவிழ்ந்தது. அதில் மீன்கள் சாலையில் கொட்டி சிதறி கிடந்தன. மினிலாரியில் டயரை கழற்றி மாற்றும் பணியில் ஈடுபட்ட இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். சாலையில் கவிழ்ந்த மினி லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். விபத்து குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story