குறளோவியம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு
குறளோவியம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.
வாணியம்பாடி
தமிழக அரசு ஆணைக்கிணங்க, தமிழ் இணையக் கல்விக் கழகம் சார்பில் மாநில அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு இடையே ‘குறளோவியம்’ என்ற பெயரில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் வாணியம்பாடி, இஸ்லாமியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி ஆயிஷா சித்தீக்கா, திருப்பத்தூர், ஹோலி கிராஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி ஜெ.சாதியா, வாணியம்பாடி இந்து மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவி சுரேகா வர்ஷினி ஆகிய 3 பேரும் முதல் 3 இடங்களைபிடித்தனர்.
அவர்களுக்கு திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா ஊக்கப்பரிசாக ரூ.1,000-க்கான காசோலை, பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
இதேபோல் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினரும் பாராட்டு தெரிவித்தனர்.
Related Tags :
Next Story