கோத்தகிரியில் கருமாரியம்மன் கோவில் திருவிழா நிறைவு


கோத்தகிரியில் கருமாரியம்மன் கோவில் திருவிழா நிறைவு
x
தினத்தந்தி 8 May 2022 7:46 PM IST (Updated: 8 May 2022 7:46 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் கருமாரியம்மன் கோவில் திருவிழா நிறைவு

கோத்தகிரி 

கோத்தகிரி டானிங்டன் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கருமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 6 ஆம் தேதி தொடங்கியது. சனிக்கிழமை காலை கணபதி வழிபாடு, கன்னிமார், கருப்பராயர் மற்றும் தன்னாசியப்பருக்கு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து பால்குட ஊர்வலம், அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் உற்சவர் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு தரிசனம் செய்தனர். திருவிழாவின் நிறைவு நிறைவு நாள் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Next Story