கல்லட்டியில் பலத்த மழையால் தடுப்பணை உடைந்தது


கல்லட்டியில் பலத்த மழையால் தடுப்பணை உடைந்தது
x
தினத்தந்தி 8 May 2022 7:46 PM IST (Updated: 8 May 2022 7:46 PM IST)
t-max-icont-min-icon

கல்லட்டியில் பெய்த பலத்த மழை காரணமாக 20 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் கிராம மக்கள் அவதி அடைந்தனர்.

ஊட்டி

கல்லட்டியில் பெய்த பலத்த மழை காரணமாக 20 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் கிராம மக்கள் அவதி அடைந்தனர்.

பலத்த மழை

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. இந்த நிலையில் ஊட்டி தலைகுந்தா அருகிலுள்ள கல்லட்டி கிராமத்தில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. மேலும் மழையுடன் சேர்த்து பயங்கரமாக காற்றும் வீசியது.
இந்த நிலையில் மழைநீர் சாலையோரமாக கால்வாய் வழியாக சென்று சிறிய அளவில் தடுப்பணையில் சேகரமாகி வந்தது. அந்த தடுப்பணையில் ஈரப்பதம் தாங்காமல் உடைந்து விட்டது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வந்தது.

20 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

இதனால் தடுப்பணையில் இருந்த தண்ணீர் மற்றும் மழைநீர் சேர்ந்து கல்லட்டி சாலையோரம் இருந்த 20 வீடுகளுக்குள் புகுந்தது. அதனுடன் சேர்ந்து சேரும் புகுந்து விட்டது. இரவு நேரம் என்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் கிராம மக்கள் அவதி அடைந்தனர். இது குறித்த தகவலின் பேரில் ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேம் ஆனந்தன் தலைமையில் தீயணைப்பு துறையினரும் நெடுஞ்சாலை மற்றும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதை தொடர்ந்து பொதுமக்களை அருகில் இருந்த உறவினர்கள் வீடுகளில் தங்க வைத்தனர். இதற்கிடையே மழை நின்று விட்டதால் வீடுகளில் தண்ணீர் வடிந்து விட்டது. ஆனால் வீடுகள் முழுவதும் மண் மற்றும் சேறு கிடக்கிறது. மேலும் வீடுகள் அருகே மண் அரிப்பு ஏற்பட்டு உள்ளதால் வீடுகள் எப்போது இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதற்கிடையே வீடுகள் நிலை குறித்து வருவாய் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

காய்கறி பயிர்கள் சேதம்

இதேபோல் கனமழை காரணமாக உல்லத்தி, மேல் கல்லட்டி, ஏக்குனி, காரபிள்ளு ஆகிய பகுதிகளில் 100 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த காய்கறி பயிர்கள் சேதம் ஆனது. இதுபற்றி அறிந்ததும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் நேரில் சென்று சேதமான பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

Next Story