கயத்தாறு அருகே தாயை அரிவாளால் வெட்டிய மகன் கைது


கயத்தாறு அருகே தாயை அரிவாளால் வெட்டிய மகன் கைது
x
தினத்தந்தி 8 May 2022 7:51 PM IST (Updated: 8 May 2022 7:51 PM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே மதுகுடிக்க பணம் தர மறுத்த தாயை அரிவாளல் வெட்டிய மகனை போலீசார் கைது செய்தனர்.

கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள சூரியமினிக்கன் கிராமத்தில் வடக்கு தெருவில் வசித்து வருபவர் கொம்பையாபாண்டியன். விவசாயி. இவரது மூத்த மகன் முருகன் (வயது 42). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இவர் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து ரகளை செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார். மேலும்  மது குடிப்பதற்கு அடிக்கடி தாய் பார்வதியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மது குடிப்பதற்கு பார்வதியிடம் பணம் கேட்டுள்ளார். தன்னிடம் பணம் இல்லை என அவர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முருகன் கையில் வைத்திருந்த அரிவாளால் பார்வதியில் தலையில் வெட்டியுள்ளார். அவரது தலையில் ரத்தம் வழிந்தோடியது. ரத்த வெள்ளத்தில் பார்வதியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்துள்ளனர். இதை பார்த்த முருகன் அங்கிருந்து அரிவாளுடன் தப்பி ஓடிவிட்டார். உடனடியாக பார்வதியை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பால் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தார்.

Next Story