கிணற்றில் பிணமாக கிடந்த ஓட்டல் தொழிலாளி
ஆம்பூர் அருகே ஓட்டல் தொழிலாளி கிணற்றில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர்
ஆம்பூரை அடுத்த வெங்கடசமுதிரம் ஊராட்சி ரங்காபுரம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் உமராபாத் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று கிணற்றில் பிணமாக கிடந்தவரை மீட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 36) என்பதும், ஆம்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் சுரேஷ் உடலை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story