காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என திருவாரூரில் நடந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்கள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருவாரூர்:
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என திருவாரூரில் நடந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்கள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நிர்வாகிகள் கூட்டம்
திருவாரூரில் கிராம ஊராட்சி மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்கள் சங்க மாநில ஒருங்கிணைந்த கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூட்டம் அரசு அலுவலர் உதவியாளர் சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் டேவிட் சத்தியநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குமரவேலு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாநில கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் வரவேற்றார். இதில் மாநில கூட்டமைப்பின் தலைவர் செல்வம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காலமுறை ஊதியம்
கூட்டத்தில், மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் அனைத்து மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு ஒரே மாதிரி ஊதியம் வழங்க வேண்டும். திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல், நன்னிலம் ஒன்றியங்களில் ஊதிய உயர்வு, நிலுவை தொகை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story