மன்னார்குடியில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


மன்னார்குடியில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 May 2022 8:45 PM IST (Updated: 8 May 2022 8:45 PM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடி ஜீயரை கைது செய்ய வலியுறுத்தி மன்னார்குடியில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி:
மயிலாடுதுறையில் பட்டின பிரவேசம் நிகழ்ச்சிக்கான தடையை ரத்து செய்யாவிட்டால் தமிழக அமைச்சர்கள் சாலைகளில் நடமாட முடியாது என பேசிய மன்னார்குடி செண்பகமன்னார் செண்டலங்கார ராமானுஜ ஜீயரை கண்டித்து மன்னார்குடி பெரியார் சிலை எதிரே தஞ்சை, திருவாரூர் மண்டல திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு  மாவட்ட தலைவர் சித்தார்த்தன் தலைமை தாங்கினார். மாநில அமைப்பாளர்  குணசேகரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை தி.க. மாநில பொதுச்செயலாளர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில்  மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம்பாலு கலந்துகொண்டு பேசினார். இதில் தி.க., தி.மு.க, ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மன்னார்குடி ஜீயரை கைது செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Next Story