படுகாயமடைந்த மெக்கானிக் சிகிச்சை பலனின்றி சாவு


படுகாயமடைந்த மெக்கானிக் சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 8 May 2022 8:50 PM IST (Updated: 8 May 2022 8:50 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த மெக்கானிக் சிகிச்சை பலனின்றி சாவு

குடவாசல்:
குடவாசல் அருகே உள்ள மணக்கால் அய்யம்பேட்டை திருவாஞ்சியம் ரோட்டை சேர்ந்தவர் சக்திவேல்(வயது42). மெக்கானிக். கடந்த 5-ந்தேதி இவர் கடைக்கு வந்த மோட்டார் சைக்கிளை பழுது நீக்கம் செய்வதற்காக ஓட்டி பார்த்தார். அப்போது மணக்கால் அய்யம்பேட்டை பேக்கரி கடை அருகே வந்த போது, மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு  திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு  சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 6-ந்தேதி சக்திவேல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சக்திவேல் தம்பி பிரபு கொடுத்த புகாரின் பேரில் குடவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story