தூத்துக்குடியில் கஞ்சா வியாபாரி கொலையில் மேலும் 2 வாலிபர்கள் கைது


தூத்துக்குடியில் கஞ்சா வியாபாரி கொலையில் மேலும் 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 8 May 2022 8:54 PM IST (Updated: 8 May 2022 8:54 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி கஞ்சா வியாபாரி தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட மேலும் 2 வாலிபர்களை நேற்று போலீசார் கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

தூத்துக்குடி:
தூத்துக்குடி கஞ்சா வியாபாரி தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட மேலும் 2 வாலிபர்களை ஞாயிற்றுக்கிழமை  போலீசார் கைது செய்தனர்.  கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
தலை துண்டித்து கொலை
தூத்துக்குடி தெற்கு சம்பந்த மூர்த்தி தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 42). கஞ்சா வியாபாரி. இவர் மீது கஞ்சா விற்பனை செய்ததாக வழக்குகள் உள்ளன. இவர் ஜார்ஜ் ரோட்டில் உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்தின் மாடியில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து தென்பாகம் போலீசார் வழக்குபதிவு செய்தனர். தூத்துக்குடி நகர உதவி போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சந்தீஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய 18 வயது பள்ளி மாணவன் ஒருவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், தாமோதரநகரை சேர்ந்த இசக்கிராஜா (21), சண்முகபுரத்தை சேர்ந்த ஜெயக்குமார் என்ற அருண் (20) ஆகிய 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
விரோதம்
கொலை செய்யப்பட்ட பிரபு, இசக்கிராஜா ஆகியோர் கூட்டாளிகளாக இருந்து உள்ளனர். பிரபுவின் ஆலோசனையின்படி இசக்கிராஜா ஒரு செல்போன் கடை யில் திருடியதாக கூறப்படுகிறது. இதில் இசக்கிராஜா கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருந்து உள்ளார். இந்த கொள்ளையில், பிரபுக்கு பங்கு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே விரோதம் ஏற்பட்டு உள்ளது. அதே நேரத்தில் இசக்கிராஜாவின் ஆதரவாளர்கள் கஞ்சா விற்பனையை பிரபு போலீசில் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஜெயிலில் இருந்து வந்த இசக்கிராஜா, தனது நண்பர்களுடன் பிரபுவை மது குடிக்க அழைத்து உள்ளார். பின்னர் மதுபோதையில் இருந்த பிரபுவை, இசக்கிராஜா நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்து இருப்பது தெரியவந்து உள்ளது. தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story