19 லட்சம் மின்னணு வாக்கு எந்திரங்கள் மாயமானது குறித்து நீதி விசாரணை; காங்கிரஸ் வலியுறுத்தல்
19 லட்சம் மின்னணு வாக்கு எந்திரங்கள் மாயமானது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்துகிறது.
பெங்களூரு
கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் எச்.கே.பட்டீல் எம்.எல்.ஏ. பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடக பட்ஜெட் கூட்டத்தொடரில் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான விவாதம் நடைபெற்றது. இதில் நான் பங்கேற்று பேசுகையில், நாட்டில் 19 லட்சம் மின்னணு வாக்கு எந்திரங்கள் மாயமானதாக கூறினேன். அப்போது சபாநாயகர் காகேரி, அதற்கு ஏதாவது ஆதாரங்கள் கொடுத்தால் அதை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைப்பதாக கூறினார்.
இந்த நிலையில் நான் அந்த 19 லட்சம் மின்னணு வாக்கு எந்திரங்கள் மாயமானது தொடர்பாக சில ஆவணங்களை சபாநாயகர் காகோரியை நேரில் சந்தித்து வழங்கினேன். மேலும் 2,750 பக்க ஆவணங்களை வழங்கியுள்ளேன். வாக்கு எந்திரங்களை தவறாக பயன்படுத்த முடியும் என்பது குறித்தும் பேசினேன். இதில் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்த வேண்டும். மாயமான வாக்கு எந்திரங்கள் குறித்து நீதி விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு எச்.கே.பட்டீல் கூறினார்.
Related Tags :
Next Story