2-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம்


2-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 8 May 2022 9:48 PM IST (Updated: 8 May 2022 9:48 PM IST)
t-max-icont-min-icon

மதுரை கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 2-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூடலூர்: 

மதுரை- லோயர்கேம்ப் இடையே ரூ.1296 கோடி செலவில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி லோயர்கேம்ப் அருகே வண்ணான் துறையில் முல்லைப்பெரியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி குழாய்கள் மூலம் மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லப்பட உள்ளது. இந்த திட்டத்தை முல்லைப்பெரியாற்றில் குருவனூத்து வண்ணான் துறை பகுதியில் இருந்து கொண்டு சென்றால் சலவைத்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவே இந்த திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும். மதுரை கூட்டுக்குடிநீர் திட்டத்தை கைவிட்டு வைகை அணையிலிருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி நேற்று கூடலூர் புதிய பஸ் நிலையம் அருகே ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதில் சலவைத் தொழிலாளர்கள், அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் கலந்துகொண்டனர். 

இந்நிலையில்  2-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் கூடலூர் விவசாயிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து 3-வது நாளாக  நாளை (திங்கட்கிழமை) 5 மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதனால் கூடலூர் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story