வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 45,393 பேருக்கு கொரோனா தடுப்பூசி
வேலூர் மாவட்டத்தில் 1,965 இடங்களில் நடந்த சிறப்பு முகாமில் ஒரேநாளில் 45,393 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் 1,965 இடங்களில் நடந்த சிறப்பு முகாமில் ஒரேநாளில் 45,393 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
1,965 இடங்களில் சிறப்பு முகாம்
தமிழகத்தில் கொரோனாவினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கவும், தொற்று பரவலை கட்டுப்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக தமிழகம் முழுவதும் நேற்று ஒரேநாளில் ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி சிறப்பு முகாம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் பஸ்நிலையங்கள், மார்க்கெட், பஜார், உழவர்சந்தைகள் உள்பட 1,965 இடங்களில் சிறப்பு முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வேலூர் டோல்கேட் உழவர்சந்தையில் நடந்த சிறப்பு முகாமை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் அங்குள்ள வியாபாரிகள், பொதுமக்களிடம் கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளீர்களா என்று கேட்டறிந்தார். இதில், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பானுமதி, உதவி கலெக்டர் பூங்கொடி, வேலூர் மாநகராட்சி நல அலுவலர் மணிவண்ணன், தாசில்தார் செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
45,393 பேருக்கு கொரோனா தடுப்பூசி
தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடந்தது. இதில் பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். குறிப்பாக 2-வது தவணை கொரோனா தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசி அதிகம் நபர்கள் போட்டு கொண்டனர். தடுப்பூசி போடும் பணியில் செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் என்று 500-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
மாவட்டம் முழுவதும் 1,965 இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் ஒரேநாளில் 45,393 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 101 சதவீதம் பேருக்கும், 2-வது தவணை தடுப்பூசி 89 சதவீதம் பேருக்கும், பூஸ்டர் தடுப்பூசி 50 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story